தேசிய கத்தோலிக்க சமூகதொடர்பு ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்பட்ட மறைமாவட்ட சமூகதொடர்பு ஆணைக்குழு இயக்குநர்களுக்கான ஒன்றுகூடல் யூன் மாதம் 25ஆம் திகதி புதன்கிழமை கொழும்பு உயர் மறைமாட்ட ஆயர் இல்லத்தில் அமைந்துள்ள ஜோ நெத் சமூகத்தொடர்பு மையத்தில் நடைபெற்றது.
தேசிய ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை யூட் கிறிஸாந்த அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் எநசடிரஅ தொலைக்காட்சி மற்றும் செத் குஆ நிறுவுனர்கள் கலந்து தமது ஊடகங்கள் ஆற்றிவரும் பணிகள் தொடர்பாக கலந்துரையாடினர்.
தொடர்ந்து மறைமாவட்டங்களின் ஊடக மையங்கள் ஆற்றிவரும் பணிகள் பற்றிய அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு எதிர்கால திட்டங்கள் ஆராயப்பட்டன.