மன்னார் மறைமாவட்ட, கல்வி மற்றும் மறைக்கல்வி ஆணைக்குழு ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட “மறைக்கல்வி தடங்கள்” நூல் வெளியீடு தை மாதம் 21ஆம் திகதி புதன்கிழமை மன்னார் மறைக்கல்வி நிலையத்தில் நடைபெற்றது.

ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை கிறுசாந்த் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிபிள்ளை ஞானப்பிரகாசம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து மறைமாவட்ட மறைக்கல்வி மற்றும் கல்வி ஆணைக்குழுவின் வரலாற்றையும் மறையாசிரியர்களின் வளர்ச்சி படிநிலையையும் உள்ளடக்கிய “மறைக்கல்வி தடங்கள்” நூலை வெளியிட்டுவைத்தார்.

இந்நிகழ்வில் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை தமிழ்நேசன், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், மறையாசிரியர்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin