வட்டக்கச்சி, அக்கராயன், கிளிநொச்சி மற்றும் உருத்திரபுரம் பங்குகளின் மரியாயின் சேனை அங்கத்தவர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட செபமாலை பேரணி ஐப்பசி மாதம் 04ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
கிளிநொச்சி மறைக்கோட்ட மரியாயின் சேனை இணைப்பாளர் அருட்தந்தை ஜோண் கனீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இப்பேரணி கிளிநொச்சி ஆரோபணம் இளையோர் இல்லத்தில் ஆரம்பமாகி ஜெயந்திநகர் புனித அந்தோனியார் ஆலயத்தை சென்றடைந்து அங்கு கிளிநொச்சி மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜெயக்குமார் அவர்களின் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்ட திருப்பலியுடன் நிறைவடைந்தது.
திருப்பலி நிறைவில் அங்கத்தவர்களுக்கான தோழமை விருந்து இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில் 100 வரையான அங்கத்தவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

By admin