ஆனையூரான் ஜெராட் அவர்களின் அன்னை மரியாள் கவிதைகள் அடங்கிய “மரியன்னைக்கு மகுடம்” நூல் வெளியீட்டு நிகழ்வு ஆவணி மாதம் 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சுவிஸ் சூரிச் Herz Jesu ஆலயத்தில் நடைபெற்றது.

இந்நூலை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பரகாசம் அவர்கள் வெளியிட்டுவைத்ததுடன் நூலுக்கான அறிமுக உரையை சுவிஸ் கத்தோலிக்க ஆன்மீக பணியக இயக்குநர் அருட்தந்தை யூட்ஸ் முரளிதரன் அவர்களும் ஆய்வுரையை எழுத்தாளர் செல்வம் அவர்களும் வழங்கியிருந்தனர்.

By admin