மன்னார் வாழ்வுதயம் நிறுவத்தினால் மன்னார் மடுமாதா வைத்தியசாலை வளாகத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள செயற்கை அவயவங்கள் பொருத்தும் நிறுவனத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு யூலை மாதம் 05ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

நிறுவன இயக்குனர் அருட்தந்தை அருள்ராஜ் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து புதிய கட்டடத்திற்கான அடிக்கல்லை நாட்டிவைத்தார்.

போர் மற்றும் விபத்துக்களால் அவயவங்களை இழந்தோருக்கு உதவும் நோக்கில் கடந்த 25 ஆண்டுகளாக பணியாற்றிவரும் இந்நிறுவனத்திற்கான நிரந்தர கட்டடம் மிசரியோ நிறுவனத்தின் அனுசரணையில் தற்போது அமைக்கப்படவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin