மன்னார் மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட 2026ஆம் ஆண்டிற்கான மேய்ப்புப்பணி திட்டமிடல் மாநாடு கடந்த 27, 28, 29ஆம் திகதிகளில் மன்னார் மறைமாவட்ட குடும்ப பணிகள் மற்றும் பொதுநிலையினர் நிலையத்தில் நடைபெற்றது.

மேய்ப்புப்பணி திட்டமிடல் மாநாட்டு செயலாளர் அருட்தந்தை கிறிஸ்ரி றூபன் பெர்னான்டோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் 2026ஆம் ஆண்டு மன்னார் மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள மேய்ப்புப்பணி திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

இந்நிகழ்வில் வின்சென்சியன் சபை அருட்தந்தை அகஸ்ரின் முண்டேகாட், கிளறேசியன் சபை அருட்தந்தை ஜோய் மரியரட்ணம், வின்சென்சியன் சபை அருட்தந்தை சேவியர் அன்ரனி ஆகியோர் கலந்து மாநாட்டு கருத்துரைகள் வழங்கி குழு ஆய்வுகளையும் வழிநடத்தினர்.

இறுதிநாள் நிகழ்வுகள் 29ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றதுடன் அன்றைய தினம் மறைமாவட்ட ஆயர் தலைமையில் திருப்பலியும் தொடர்ந்து ஆய்வுதிட்ட முன்மொழிவு, பொதுக்கலந்துரையாடல், தொகுப்புரை, ஆயரின் சிறப்புரை என்பனவும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், ஆணைக்குழுக்களின் பிரதிநிதிகள், துறவற சபைகளின் பிரதிநிதிகள், பங்கு பிரதிநிதிகள், பொதுநிலையினரென 200 வரையானவர்கள் கலந்துகொண்டனர்.

By admin