யூபிலி ஆண்டு சிறப்பு நிகழ்வாக மன்னார் மறைமாவட்ட மரியாயின் சேனை கொமிற்சியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட வெளிவிழா நிகழ்வு ஆவணி மாதம் 21ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.
சபை ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை அகஸ்ரின் புஸ்பராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சேனையினர் யாழ். மறைமாவட்டத்தை தரிசித்து இலங்கையில் முதன்முறையாக மரியாயின் சேனை பிரசீடியம் உருவாக்கப்பட்ட பாண்டியன்தாழ்வு புனித அன்னாள் ஆலயம், கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி, பாசையூர் புனித அந்தோனியார் ஆலயம், யாழ். புனித மரியன்னை பேராலயம், சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலம், யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமடம் ஆகிய இடங்களை பார்வையிட்டு அங்கு இடம்பெற்ற நிகழ்வுகளிலும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட பங்கு பிரசீடியங்களை சேர்ந்த 550 வரையான மரியாயின் சேனை அங்கத்தவர்கள் பங்குபற்றியிருந்தனர்.