கிறிஸ்துவின் திரு உடல் திரு இரத்த பெருவிழாவை சிறப்பித்து மன்னார் மறைமாவட்ட புனித செபஸ்தியார் பேராலயத்தில் முன்னெடுக்கப்பட்ட நற்கருணை பேரணி யூன் மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை கிறிஸ்துநாயகம் அவர்களின் வழிகாட்டலில் பங்கு அருட்பணி பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்பேரணி புனித செபஸ்தியார் பேராலயத்தில் ஆரம்பமாகி நகர மத்தி, புனித மரியாள் ஆலயம், பனங்கட்டிகொட்டு கிராம ஆரம்ப எல்லை ஆகிய இடங்கள் ஊடாக மீண்டும் பேராலயத்தை சென்றடைந்து அங்கு இடம்பெற்ற நற்கருணை ஆராதனையுடன் நிறைவடைந்தது.
பேரணி தரித்த இடங்களில் சிறப்பு மறையுரைகளும் ஆசீரும் இடம்பெற்றதுடன் இறுதியாசீர் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்களால் வழங்கிவைக்கப்பட்டது.
இப்பேரணியில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களென 3000 இற்கும் அதிகமானவர்கள் பக்தியுடன் பங்குபற்றியிருந்தனர்.