தவக்காலத்தை முன்னிட்டு மன்னார் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான பாதயாத்திரை பங்குனி மாதம் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை நீக்லஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இவ்யாத்திரை ஓலைத்தொடுவாய் கர்த்தர் ஆலயத்தில் ஆரம்பமாகி சிலுவைப்பாதை தியானத்துடன் தோட்டவெளி புனித வேதசாட்சி இராக்கினி அன்னை ஆலயத்தை வந்தடைந்து அங்கு இடம்பெற்ற நற்கருணை வழிபாட்டுடன் நிறைவடைந்தது.

நற்கருணை வழிபாட்டை அருட்தந்தை ரஜினிகாந்த் அவர்கள் நெறிப்படுத்தினார். இந்நிகழ்வில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து இளையோருக்கு ஆசீ வழங்கினார்.

இவ்யாத்திரையில் மன்னார் மறைமாவட்ட பங்குகளை சேர்ந்த 400ற்கும் அதிகமான இளையோர் பக்தியுடன் பங்குபற்றினர்.

By admin