வணக்கமாதத்தை சிறப்பித்து மன்னார் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு ஐப்பசி மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மன்னார் நானாட்டான் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் நடைபெற்றது.

ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை விக்ரர் சோசை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருச்செபமாலை, நற்கருனை ஆராதனை, இளையோருக்கான ஒன்றுகூடல் என்பன நடைபெற்றன.

இந்நிகழ்வில் 100ற்கும் அதிகமான இளையோர் பங்குபற்றியிருந்தனர்.

By admin