மன்னார் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மறைமாவட்ட இளையோர் ஒன்றுகூடல் யூலை மாதம் 19, 20ஆம் திகதிகளில் மன்னார் முத்தரிப்புத்துறை புனித செங்கோல் அன்னை ஆலயத்தில் நடைபெற்றது.
ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை விக்ரர் சோசை அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு 19ஆம் திகதி சனிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியதுடன் அன்றைய தினம் நற்கருணை வழிபாடு, கலந்துரையாடல், தீப்பாசறை என்பன இடம்பெற்றன.
தொடர்ந்து 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருப்பலி, நவீன தொடர்பு சாதனங்களின் நன்மை தீமை தொடர்பான சிறப்பு கருத்தமர்வு, விளையாட்டு நிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.
இந்நிகழ்வுகளில் மறைமாவட்ட நிர்வாக உறுப்பினர்கள், பங்கு பிரதிநிதிகளென 100ற்கும் அதிகமான இளையோர் பங்குபற்றியிருந்தனர்.