இளையோர் யூபிலியை சிறப்பித்து மன்னார் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு கடந்த 13ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தோட்டவெளி வேதசாட்சிகள் இராக்கினி திருத்தலத்தில் நடைபெற்றது.

ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை விக்ரர் சோசை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் திருப்பலியும் தொடர்ந்து யோசப்வாஸ் இறையியல் கல்லூரி இயக்குநர் அருட்தந்தை றூபன் பெர்னான்டோ அவர்களின் யூபிலி தொடர்பான கருத்துரையும் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.

தொடர்ந்து இளையோர் யூபிலி கதவின் ஊடாக திருத்தலத்திற்குள் நுழைந்து வேதசாட்சிகளின் கல்லறையை தரிசித்தனர்.

இந்நிகழ்வில் மறைமாவட்ட பங்குகளை சேர்ந்த 400 வரையான இளையோர் பங்குபற்றியிருந்தனர்.

By admin