மன்னார் மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட திருத்தொண்டர் திருநிலைப்படுத்தப்படுத்தல் திருச்சடங்கு மார்கழி மாதம் 11ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் நடைபெற்றது.
மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் மன்னார் மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்சகோதரர்கள் றொபேட் அமலதாஸ் பெஞ்சமின், ஜெயசீலன் ஜெயசுதன் மற்றும் இரத்தினபுரி மறைமாவட்டத்தை சேர்ந்த திருவுளப்பணியாளர் சபை அருட்சகோதரர் ஜோசப் றோய் ஆகியோர் திருத்தொண்டர்களாக திருநிலைப்படுத்தப்பட்டனர்.
இத்திருப்பலியில் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ, மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை தமிழ்நேசன், திருவுளப்பணியாளர் சபை இலங்கை மாகாண முதல்வர் அருட்தந்தை கொட்வின் கமிலஸ் சணா மற்றும் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அருட்சகோதரர்களின் உறவினர்கள், இறைமக்களென பலரும் கலந்து செபித்தனர்.

