மன்னார் மறைமாவட்டத்தில் புதிய குருக்களுக்கான திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு 22ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் நடைபெற்றது.
மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு திருப்பலியில் மன்னார் மறைமாவட்டத்தை சேர்ந்த திருத்தொண்டர் லெயோனாட் பிரியதர்சன் பெர்னாண்டோ, திருவுள பணியாளர் சபையை சேர்ந்த திருத்தொண்டர் மரியசீலன் ஜெறோம், கிளறேசியன் சபை திருத்தொண்டர்களான நித்தியதாஸ் ஸ்ரீபன்ராஜ் மொறாயஸ், பிரான்சிஸ் சேவியர் இருதயராஜ் லியோன், அந்தோனிப்பிள்ளை மெரின்ராஜ், பெற்றிக் கிங்ஸ்லி சுரேஸ், றபாயேல் அக்குவைனஸ் குலாஸ், அல்வீனஸ் இதயராஜ், கிட்ணன் ருபேசன், பீலிக்ஸ் அருள்நேசன் வினோராஜ் ஆகியோரே புதிய குருக்களாக திருநிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
புதிய குருக்களாக திருநிலைப்படுத்தப்பட்ட இவர்கள் அர்ப்பணிப்புடன் பணிவாழ்வில் நிலைத்திருந்து இறைபணியாற்ற இறையாசீர் வேண்டுவோம்.