மன்னார் மறைமாவட்டத்தில் ஐந்து புதிய குருக்களும் இரண்டு திருத்தொண்டர்களும் திருநிலைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் சித்திரை மாதம் 09ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு திருப்பலியில் மன்னார் மறைமாவட்டத்தை சேர்ந்த திருத்தொண்டர்கள் றொபேட் அமலதாசன் பெஞ்சமின், ஜெயசீலன் ஜெயசுதன், அமலமரித்தியாகிகள் சபை திருத்தொண்டர் பத்மநாதன் அன்ரன் றெஜினோல்ட், சொமஸ்கன் சபை திருத்தொண்டர்கள் பேரின்பநாதன் மிராண்டா நிறோஜ் கிளஸ்ரன் மற்றும் சகாயநாதன் ஜெனில் பீரிஸ் ஆகியோர் குருக்களாகவும் அமலமரித்தியாகிகள் சபை அருட்சகோதரர்கள் நவரத்தினராஜா அஜந்தன் மற்றும் யேசுதாசன் றொகான் பீரிஸ் ஆகியோர் திருத்தொண்டர்களாகவும் திருநிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இத்திருப்பலியில் மன்னார் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்ணாண்டோ, மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை தமிழ்நேசன், யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம், அமலமரித்தியாகிகள் சபை யாழ். மாகாண சபை முதல்வர் அருட்தந்தை போல் ஜெயந்தன் பச்சேக், சொமஸ்கன் சபை இலங்கை – இந்திய – அவுஸ்திரேலிய மாகாண முதல்வர் அருட்தந்தை அக்னேல் அமல், புனித சவேரியார் உயர் குருத்துவக்கல்லூரி அதிபர் அருட்தந்தை பெற்றூஸ் தயாபரன் மற்றும் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களென பலரும் கலந்துசெபித்தனர்.

By admin