மன்னார் மருதமடு திருத்தல ஆடிமாத திருவிழா திருத்தல பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.
யூன் மாதம் 23ஆம் திகதி திங்கட்கிழமை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்கள் தலைமையில் அன்னையின் கொடியேற்றப்பட்டு ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 02ஆம் திகதி கடந்த புதன்கிழமை திருவிழா இடம்பெற்றது.
திருநாள் திருப்பலி தமிழ், சிங்களம், இலத்தீன் மொழிகளில் நடைபெற்றதுடன் திருப்பலியை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
திருப்பலி நிறைவில் அன்னையின் திருச்சொருப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றதுடன் இத்திருப்பலியில் இலங்கை ஆயர் மன்ற தலைவரும் குருநாகல் மறைமாவட்ட ஆயருமான பேரருட்தந்தை ஹெரல்ட் அன்ரனி பெரேரா, மன்னார் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ, அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அருட்சகோதரர்கள், அரச அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள், இறைமக்களென இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து அன்னையின் ஆசீரை பெற்றுச்சென்றனர்.