மன்னார் மறைமாவட்டம் மடுமாதா சிறிய குருமடத்தில் முன்னெடுக்கப்பட்ட வந்து பாருங்கள் இறை அழைத்தல் முகாம் கார்த்திகை மாதம் 14ஆம் திகதி தொடக்கம் 16ஆம் திகதி வரை அங்கு நடைபெற்றது.

மறைமாவட்ட ரீதியாக பங்குகளில் இறை அழைத்தலை ஊக்குவிக்குமுகமாக பங்கு மாணவர்களை இணைத்து குருமட அதிபர் அருட்தந்தை நெவின்ஸ் யோகராஜா பீரிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் உதவி அதிபர் அருட்தந்தை யதுஸ்ராஜ் அவர்களின் உதவியுடன் குருமட மாணவர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில் திருப்பலி, ஆன்மீக உரைகள், குழு கலந்துரையாடல், அனுபவ பகிர்வு, திருவிவிலிய வாசிப்பு, கலை நிகழ்வுகள், இல்ல விளையாட்டுகள், தீப்பாசறை, மகிழ்வூட்டல் நிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.

ஆன்மீக உரைகளை மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை தமிழ்நேசன், அருட்தந்தையர்கள் றூபன் பெர்னாண்டோ, ரஞ்சன் சேவியர், நெவின்ஸ் யோகராஜா பீரிஸ், திரு செபஸ்ரியாம்பிள்ளை மற்றும் திரு ஜெயக்குமார் ஆகியோர் வழங்கியிருந்தனர்.

இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட பங்குகளை சேர்ந்த 120க்கும் அதிகமான மாணவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin