மன்னார் மறைமாவட்ட புனித ஜோசப்வாஸ் இறையியல் கல்லூரி புதிய கல்வியாண்டு அங்குரார்ப்பண நிகழ்வு கல்லூரி அதிபர் அருட்தந்தை கிறிஸ்ரி றூபன் பெர்னாண்டோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் தை மாதம் 03ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஆரம்ப விரிவுரை, அருட்தந்தை கிறிஸ்ரி றூபன் பெர்னாண்டோ அவர்களின் “என்றும் எம்மோடு இருக்கின்ற துணையாளராம் தூய ஆவியானவர்” நூல் வெளியீடு என்பன இடம்பெற்றன.
ஆரம்ப விரிவுரையை மன்னார் மடுமாதா சிறிய குருமட இயக்குனர் அருட்கலாநிதி நெவின்ஸ் யோகராஜ் பீரிஸ் அவர்கள் “மறைசாட்சியத்திலிருந்து ‘மனிதநேய உயிர்சாட்சியம்’ எனும் கருத்தியலை அடிப்படையாகக் கொண்டு பொதுவெளி இறையியற் கோட்பாட்டை உருவாக்கல்” என்னும் தலைப்பில் நிகழ்த்தினார்.
மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்கள் பிரதம விருந்தினராகவும் ஓய்வுநிலை ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ, மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை தமிழ்நேசன், மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை விக்டர் சோசை, ஒய்வுநிலை மன்னார் மாவட்ட செயலாளர் திருமதி ஸ்ரான்லி டிமெல் லெம்பேட், ஓய்வுநிலை வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுகந்தி செபஸ்ரியான், ஓய்வுநிலை பிரதேச செயலாளர் திரு. பரமதாஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், கல்லூரி மாணவர்களென பலரும் பங்குபற்றியிருந்தனர்.

