மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் கனியமண் அகழ்வு மற்றும் காற்றாலை மின் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக மன்னார் பிரஜைகள் குழு, பொது அமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து தொடர்ச்சியாக கவனயீர்ப்பு பேராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர்.
இந்நிலையில் புரட்டாதி மாதம் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு பத்து மணியளவில் காற்றாலை உதிரிபாகங்களை தீவுக்குள் கொண்டு செல்வதற்கான முயற்சி இடம்பெற்றது.
உதிரிபாகங்களை ஏற்றிவந்த வாகனங்களை மக்கள் தடுத்து நிறுத்த முற்பட்ட நிலையில் காவல்துறையினர் பெண்கள் அருட்தந்தையர்கள் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு போராட்டகாரர்களை ஆயத முனையில் அச்சுறுத்தி காற்றாலை உதிரிபாகங்களையும் தீவுக்குள் கொண்டு சென்றுள்ளனர்.