மன்னார் மறைமாவட்டம் ஆட்காட்டிவெளி பங்கின் குமனாயன்குளம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த புனித தோமையார் ஆலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாயல திறப்புவிழா புரட்டாதி மாதம் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாந்தை மறைக்கோட்ட முதல்வரும் ஆட்காட்டிவெளி பங்குத்தந்தையுமான அருட்தந்தை யூட் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து புதிய ஆலயத்தை ஆசீர்வதித்து திறந்துவைத்தார்.
இந்நிகழ்வில் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை தமிழ்நேசன், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களென பலரும் கலந்துகொண்டனர்.