வடக்கு கிழக்கில் கண்டுடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழிகளுக்கு நீதிகோரி மன்னார் மாந்தை மேற்கு வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட அமைதி பேரணி யூலை மாதம் 24ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.
மன்னார் அடம்பன் சந்தியில் ஆரம்பமான இப்பேரணி திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியை சென்றடைந்து அங்கு காணாமலாக்கப்பட்ட உறவுகள் மற்றும் மனித புதைகுழிகளில் மீட்கப்பட்டவர்களுக்காக சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து ஜனாதிபதி செயலகம், மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பிவைப்பதற்கான மகஜரும் மக்களால் மன்னார் பிரஜைகள் குழு தலைவர் அருட்தந்தை மார்க்கஸ் அவர்களிடம் கையளிப்பட்டது.
இந்நிகழ்வில் வெகுஜன அமைப்பினர், பொதுமக்களென பலரும் பங்குபற்றியிருந்தனர்.