சாவகச்சேரி, மட்டுவில் புனித லூர்து அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்;தந்தை ஞானேந்திரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மாசி மாதம் 04ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது.
தை மாதம் 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி மாசி மாதம் 03ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
ஆயத்தநாள் வழிபாடுகளுக்கான மறையுரைகளை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை றொஜிஸ்ரன் அவர்கள் வழங்கியிருந்தார்.
நற்கருணைவிழா திருப்பலியை செபமாலை தாசர் சபை அருட்தந்தை பிரான்சிஸ் அவர்களும், திருவிழா திருப்பலியை தாழையடி பங்குத்தந்தை அருட்தந்தை ஆதர் ஜஸ்ரின் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.
திருவிழா திருப்பலி நிறைவில் அன்னையின் திருச்சொரூப ஆசீர்வாதம் இடம்பெற்றதுடன் திருப்பலியில் பங்கு மக்கள் மற்றும் பிற சமய சகோதரர்களும் பங்குபற்றியிருந்தனர்.

