மட்டக்களப்பு மறைமாவட்டம் திருக்கோவில் புனித சூசையப்பர் ஆலய நூற்றாண்டு திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜென்சன் லொய்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 11ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
02ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 10ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை மட்டக்களப்பு மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்ததுடன் திருவிழா அன்று 30 மாணவர்களுக்கு உறுதிபூசுதல் அருட்சாதனமும் வழங்கிவைக்கப்பட்டது.
திருவிழா திருப்பலி நிறைவில் ஆலய வளாகத்தில் ஸ்தாபிக்கப்பட்ட லூர்து அன்னை திருச்சொருபம் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் அவர்களால் ஆசீர்வதித்து திறந்துவைக்கப்பட்டது.
இத்திருப்பலியில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களென பலரும் கலந்துசெபித்தனர்.