மட்டக்களப்பு மறைமாவட்டம் கருவப்பங்கேணி பங்கில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த புனித வேளாங்கன்னி அன்னை ஆலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அல்வாலய திறப்பு விழா 01ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை ஜோர்ஜ் ஜீவராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் அவர்கள் கலந்து புதித ஆலயத்தை ஆசீர்வதித்து திறந்துவைத்து திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், இறைமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin