மட்டக்களப்பு மறைமாவட்டம் இருதயபுரம் திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான நிகழ்வு பங்குனி மாதம் 22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை கிளமன்ட் அன்னதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இவ்இரத்ததான நிகழ்வில் 35 குருதிக்கொடையாளர்கள் கலந்து இரத்ததானம் வழங்கியிருந்தனர்.

