“மடுமாதா திருத்தலத்தின் வரலாறு” நூல் வெளியீடு தை மாதம் 24ஆம் திகதி சனிக்கிழமை மன்னார் தோட்டவெளி – வேதசாட்சிகளின் இராக்கினி திருத்தலத்தில் நடைபெற்றது.
யாழ். மறைமாவட்ட குருவும் வாழ்நாள் பேராசிரியருமான அருட்தந்தை ஞானமுத்து பிலேந்திரன் அவர்களால் எழுதப்பட்ட இந்நூலை யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்திலும் மன்னார் மருதமடு அன்னை திருத்தலத்திலும் பெற்றுக்கொள்ள முடியும்.

