பொற்பதி புனித இராயப்பர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜோன் குரூஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆகஸ்ட் மாதம் 01ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

யூலை மாதம் 23ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 31ஆம் திகதி வியாழக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை யாழ். அகவொளி குடும்ப நல நிலைய இயக்குனர் அருட்தந்தை மனுவேற்பிள்ளை டேவிட் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை பருத்தித்துறை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை கிருபாகரன் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

திருவிழாவை சிறப்பித்து திருவிழா அன்று மாலை யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் விடியல் இசைகுழுவினால் இசைச்சாரல் இசைநிகழ்வும் விடியல் கலைக்குழுவினால் வெளியே வா மனிதா நாடகமும் மேடையேற்றப்பட்டன.

By admin