யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்குமிடையிலான பொன் அணிகள் போர் துடுப்பாட்டப் போட்டி பங்குனி மாதம் 12ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை ஆரம்பமாகி 14ஆம் திகதி சனிக்கிழமை வரை வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி நாணயச் சுழற்சியில் களத்தடுப்பை தெரிவுசெய்ய துடுப்பெடுத்தாடிய வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணி முதல் சுற்றில் சகல இலக்குகளையும் இழந்து 176 ஒட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய புனித பத்திரிசியார் கல்லூரி அணி சகல இலக்குகளையும் இழந்து 225 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
தொடர்ந்து இரண்டாவது சுற்றில் 49 ஓட்டங்கள் பின்னிலையுடன் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணக் கல்லூரி அணி 09 இலக்குகளை இழந்து 246 ஓட்டங்களுடன் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொள்ள 198 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய புனித பத்திரிசியார் கல்லூரி அணியினர் 04 விக்கெட்டுக்களை இழந்து 106 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள ஆட்டம் சமநிலையில் முடிந்தது.
பொன் அணிகள் போர் என அழைக்கப்படும் இத்துடுப்பாட்டப் போட்டித்தொடர் வருடம் தோறும் நடைபெற்று வரும் நிலையில் இம்முறை 109ஆவது தடவையாக நடைபெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

