மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் அமரர் பேரருட்தந்தை இராயப்பு யோசப் அவர்களுக்கான நீதியின் குரல் மரியாதை வணக்க நிகழ்வு கடந்த 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ் நாட்டின் போன்றி மாநகரில் நடைபெற்றது.
பிரான்ஸ் மன்னார் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் ஆயர் அவர்களின் உருவப்படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அவரின் பணிவாழ்வை சித்திரிக்கும் நிழற்படங்களும் காணொளியும் காட்சிப்படுத்தப்பட்டன.
தொடர்ந்து ஆயரின் நினைவாக அவரது படத்துடன் கூடிய முத்திரை வெளியிடப்பட்டதுடன் இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம், திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல், யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் ஆகியோரின் அனுபவ பகிர்வு காணொளி காட்சிப்படுத்தலும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் போன்றி மாநகர மேஜர், மதகுருமார், மக்களென பலரும் கலந்துகொண்டனர்.