மன்னார் மறைமாவட்டம் பெரிய பண்டிவிரிச்சான் பங்கு திருக்குடும்ப அருட்சகோதரிகள், இளையோர் மற்றும் பிள்ளைகள் இணைந்து முன்னெடுத்த கள அனுபவ பயணம் மாசி மாதம் 27ஆம் திகதி முதல் பங்குனி மாதம் 01ஆம் திகதி வரை நடைபெற்றது.
அருட்சகோதரி றோசி சிலுவைதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் அருட்சகோதரிகள், இளையோர் மற்றும் பிள்ளைகள் யாழ். மறைமாவட்டத்தை தரிசித்து கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலயம், பண்டத்தரிப்பு பற்றிமா அன்னை திருத்தலம், பண்டத்தரிப்பு செபமாலை தோட்டம், இளவாலை நட்புமண் பூங்கா, கசூரினா கடற்கரை, றீச்சா, இளவாலை திருக்குடும்ப கன்னியர் மடம், ஜம்புகோளப்பட்டினம், மாதகல் லூர்து அன்னை திருத்தலம், உடுவில் ஆர்க் மாற்றுத்திறனாளிகள் இல்லம், கீரிமலை, K.K.S கடற்கரை, பருத்தித்துறை தும்பளை புனித லூர்து அன்னை கெபி, மணற்காடு, ஆகிய இடங்களை பார்வையிட்டனர்.
அத்துடன் மானிப்பாய் திருக்குடும்ப இளையோர் மற்றும் சிறுவர்களுடனான ஒன்றுகூடலும் 28ஆம் திகதி மாலை மானிப்பாய் சென் ஆன்ஸ் றோ.க.த.க பாடசாலையில் நடைபெற்றது.
அருட்சகோதரி நீற்றா அந்தோனிப்பிள்ளை அவர்களின் தலைமையில் இடம்பெற்ற ஒன்றுகூடலில் கலைநிகழ்வுகள், விளையாட்டுக்களுடன் பரிசளிப்பும் நடைபெற்றன.
இக்கள அனுபவ பயணத்தில் 40 பேர் பங்குபற்றி பயனடைந்தனர்.

