பெரியவிளான் புனித அந்தோனியார் ஆலய அமல அன்னை மன்ற அங்கத்தவர்கள் இணைந்து முன்னெடுத்த தவக்கால யாத்திரை, பங்குனி மாதம் 23ஆம் 24ஆம் திகதிகளில் நடைபெற்றது.
பங்குத்தந்தை நற்கருணைநாதர் சபை அருட்தந்தை ஞானநேசன் மற்றும் உதவிப் பங்குத்தந்தை அருட்தந்தை சன்ரான அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மன்றத் தலைவி திருமதி. நிமல்டா ஜெயக்கொடி அவர்களின் உதயிவுடன் இடம்பெற்ற இவ்யாத்திரையின் முதல்நாள் மன்றத்தினர் கொழும்பு, தேவத்த லங்கா மாதா திருத்தலத்திற்குச் சென்று அங்கு இடம்பெற்ற செபமாலையில் பங்குபற்றினர்.
இரண்டாம் நாள், ஹங்வெல்ல, நிருப்பொல கல்வாரி பூங்காவை தரிசித்து அங்கு நடைபெற்ற சிலுவைப்பாதை மற்றும் திருப்பலியில் கலந்துகொண்டனர்.
திருப்பலியை பங்குத்தந்தை அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
இத்தவக்காலத் திருயாத்திரையில் 35ற்கும் அதிகமான அன்னையர்கள் பக்தியுடன் பங்குபற்றினர்.

