பெரியவிளான் புனித அந்தோனியார் ஆலய பங்குமக்களால் மேடையேற்றப்பட்ட “பலிக்களம்” திருப்பாடுகளின் ஆற்றுகை பங்குனி மாதம் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆலய வளாகத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை நற்கருணைநாதர் சபை அருட்தந்தை ஞானநேசன் அவர்களின் தலைமையில் 120அடி மேடையில் 100ற்கும் அதிகமான கலைஞர்களின் பங்குபற்றுதலோடு மேடையேற்றப்பட்ட இவ்வாற்றுகையை திரு. நிரூஜன் அவர்கள் நெறியாள்கை செய்திருந்தார்.
இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம், இளவாலை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை யேசுதாசன், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

