கொக்கிளாய் புளியமுனை புனித மிக்கேல் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை ஜேக்கப் யோகராஜா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 29ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது.
25ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை அமலமரித்தியாகிகள் சபை சிறிய குருமட உருவாக்குநர் அருட்தந்தை யூட் கரோவ் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்ததுடன் இத்திருப்பலியில் முல்லைத்தீவு மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை இராஜசிங்கம், அளம்பில் பங்குத்தந்தை அருட்தந்தை எமில் போல், முகத்துவாரம் பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை சம்பத், அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தையர்கள் விமலநாதன், பற்றிக் லியோ ஆகியோரும் இணைந்து செபித்தனர்.
அத்துடன் திருவிழாவை சிறப்பித்து அன்று மாலை பங்குமக்களுக்கான மகிழ்வின் பொழுது விளையாட்டு நிகழ்வும் இடம்பெற்றது.

By admin