புலோப்பளை புனித இராயப்பர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜோர்ச் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆகஸ்ட் மாதம் 01ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

யூலை மாதம் 23ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 31ஆம் திகதி வியாழக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

நற்கருணைவிழா ஆரம்பத்தில் புனிதரின் திருச்சொருபம் புதிதாக அமைக்கப்பட்ட தேரில் ஏற்றப்பட்டு தேர்ப்பவனி இடம்பெற்றதுடன் நற்கருணைவிழா திருப்பலியை யாழ் பல்கலைக்கழக வருகை விரிவுரையாளர் அருட்தந்தை ஜெயரஞ்சன் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

தொடர்ந்து 01ஆம் திகதி திருவிழா இடம்பெற்றதுடன் திருப்பலியை யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

By admin