புலோப்பளை பங்கிலுள்ள மாணவர்களுக்கான சிறப்பு கருத்தமர்வு தை மாதம் 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை புலோப்பளை புனித இராயப்பர் ஆலயத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை ஜோர்ஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இக்கருத்தமர்வில் கொர்னேலியன் சபை அருட்தந்தை டேவிட் அவர்கள் வளவாளராக கலந்து கருத்துரைகள், குழுச்செயற்பாடுகள் ஊடாக மாணவர்களை நெறிப்படுத்தியதுடன் திருச்சிலுவை கன்னியர் சபை அருட்சகோதரிகளும் கலந்து கருத்துரைகள் வழங்கியிருந்தனர்.
இக்கருத்தமர்வில் 50ற்கும் அதிகமான மாணவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

