கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தின் கல்வி உதவித்திட்டத்தின்கீழ் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் போர் மற்றும் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களிலிருந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான செயலமர்வு யூன் மாதம் 21, 22ஆம் திகதிகளில் முல்லைத்தீவு றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தில் நடைபெற்றது.

நிறுவன இயக்குனர் அருட்தந்தை செபஜீவன் அவர்களின் தலைமையில் வித்தியாலய அதிபர் அருட்சகோதரி வெனிகலாமேரி அவர்களின் வழிநடத்தலில் நடைபெற்ற இச்செயலமர்வில் திரு. ஜிரோசன் மற்றும் திரு. குணபாலன் ஆகியோர் வளவாளர்களாக கலந்து மாணவர்களை நெறிப்படுத்தினர்.

இச்செயலமர்வில் முல்லைத்தீவு றோமன் கத்தோலிக்க வித்தியாலயம், கள்ளப்பாடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, சிலாவத்தை தமிழ் வித்தியாலயம் ஆகிய 3 பாடசாலைகளையும் சேர்ந்த 80ற்கும் அதிகமான மாணவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin