திருச்சிலுவை கன்னியர் சபை அருட்சகோதரிகளால் யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் நடாத்தப்பட்டுவரும் புனித வளனார் முதியோர் இல்லம் ஆரம்பிக்கப்பட்டதன் 90ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு புரட்டாதி மாதம் 20ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
முதியோர் இல்ல பொறுப்பாளர் அருட்சகோதரி பிறிஸ்ஸில்லா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நன்றி திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.