மன்னார் மறைமாவட்ட பள்ளிமுனை பங்கின் புனித லூசியா ஆலய கலைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட “புனித லூசியாவின் வாழ்க்கை” நாடக ஆற்றுகை பங்குத்தந்தை அருட்தந்தை டெஸ்மன் குலாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 22, 23ஆம் திகதிகளில் புனித லூசியா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

பள்ளிமுனை கிராம மக்களின் பாதுகாவலியும் கண்ணின் பாதுகாலவியும், கற்புக்கரசியுமான புனித லூசியாவின் வாழ்வை சித்தரிக்கும் இவ்வாற்றுகையை அமரர் புலவர் லோப்பர் அவர்கள் எழுதியதுடன் இவ்வாற்றுகையில் 40 கலைஞர்கள் பங்குபற்றியிருந்தனர்.

இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பங்குமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin