தாத்தா பாட்டிகள் மற்றும் முதியோர் தினத்தை சிறப்பித்து புனித திரேசாள் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு ஆகஸ்ட் மாதம் 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வின் ஆரம்பத்தில் முதியோர் பேரப்பிள்ளைகளால் பூச்செண்டு கொடுத்து ஆலயத்திற்குள் அழைத்து வரப்பட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

திருப்பலியை தொடர்ந்து ஆலய மண்டபத்தில் முதியோர்களுக்கான ஒன்றுகூடல் இடம்பெற்றது.

இவ் ஒன்றுகூடல் நிகழ்வில் தேநீர் விAருந்து, கலைநிகழ்வுகள், முதியோர்களுக்கான கௌரவிப்பு என்பன இடம்பெற்றதுடன் முதியோர்களுக்கு அன்பளிப்புக்களும் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் 30 வரையான முதியோர் பங்குபற்றியிருந்தனர்.

By admin