நெடுந்தீவு புனித திருமுழுக்கு யோவான் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

26ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 28ஆம் திகதி வியாழக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றதுடன் அன்றைய தினம் இந்தியாவிலிருந்து வருகைதந்த சகோதரர் சாயு தலைமையிலான குழுவினரால் குணமளிக்கும் வழிபாடும் முன்னெடுக்கப்பட்டது.

திருவிழா மற்றும் நற்கருணைவிழா திருப்பலியை அருட்தந்தை சோபன் றூபஸ் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

அத்துடன் திருவிழாவை சிறப்பித்து அன்று மாலை பசுந்தீவு ஜெயா நற்பணி மன்றத்தினால் தேவா கலாச்சார திறந்தவெளி அரங்கில் “ஏதோரியாள் சபதம்” தென்மோடி நாட்டுக்கூத்தும் மேடையேற்றப்பட்து.

இந்நாட்டுக்கூத்தை பசுந்தீவு கலாபூசணம் அண்ணாவியார் சைமன் யேசுதாசன் பொன்னுத்துரை அவர்கள் நெறியாள்கை செய்திருந்தார்.

By admin