இளவாலை புனித யாகப்பர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட புனித செபமாலை அன்னை திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஐப்பசி மாதம் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

04ஆம் திகதி வியாழக்கிழமை ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 11ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை ரமேஸ் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி உப அதிபர் அருட்தந்தை சுமன் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

By admin