யாழ். கொழும்புத்துறை புனித சவேரியார் குருத்துவக் கல்லூரியில் இயங்கிவரும் புனித அன்னை தெரேசா சமூக சேவை கழகத்தினர் ஐப்பசி மாதம் 29ஆம் திகதி கடந்த புதன்கிழமை புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் துப்பரவுப் பணிகளில் ஈடுபட்டனர்.

புனித மரியன்னை பேராலய பங்குத்தந்தை மற்றும் உதவிப் பங்குத் தந்தையர்களின் வேண்டுதலுக்கிணங்க, கழக இயக்குநர் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை மரிய செபஸ்ரியன் அவர்களின் வழிகாட்டுதலில் அருட்சகோதரன் ஜெயசுதன் அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இப்பணி இறந்த அன்பர்களின் நினைவுக்கு மரியாதை செலுத்துவதாக அமைந்தது.

By admin