மானிப்பாய் புதுமடம் கர்த்தர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட நற்கருணை பீடப்பணியாளர் ஆண்டுவிழா கார்த்திகை மாதம் 16ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் பங்குத்தந்தை தலைமையில் காலை திருப்பலியும் மாலை பீடப்பணியாளர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.

பீடப்பணியாளர் தலைவர் செல்வன் அஜய் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கலைநிகழ்வில் சுன்னாகம் பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்கள் பிரதம விருந்தினராகவும், உடுவில் ஆர்க் இல்ல பொறுப்பாளர் அருட்சகோதரி சாந்தினி அவர்கள் சிறப்பு விருந்தினராகவும், மானிப்பாய் புனித அன்னாள் பாடசாலை அதிபர் அருட்சகோதரி நீற்றா அவர்கள் கௌரவ விருந்தினராகவும், கலந்து சிறப்பித்தனர்.

கலைநிகழ்வில் பீடப்பணியாளர்களினால் கவிதை, பேச்சு, பாடல், போன்ற நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டதுடன் நடப்பாண்டிற்கான செயற்பாட்டறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது.

நடப்பாண்டில், வறிய மாணவர்களின் கல்வி உதவி, ஆலய வின்சன்ட் டி போல் சபையினரின் மனித நேயப்பணிக்கு தேவைக்கேற்ப நிதி உதவி, ஆலயத்திலும் வீதிகளிலும் சிரமதானம் ஊடாக துப்பரவுப்பணி போன்ற பலராலும் பாராட்டத்தக்க பணிகளை முன்னெடுத்திருந்ததுடன் புனித அன்னாள் ஆலய பீடப்பணியாளருடன் இணைந்து ஒரு குடும்பத்திலுள்ள வறிய மாணவர்களின் கற்றலுக்கு உதவியாக ஒரு தொகுதி தளபாடங்களையும் இவர்கள் அன்பளிப்பு செய்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin