புதுக்குடியிருப்பு றோ.க வித்தியாலய ஒளிவிழா கார்த்திகை மாதம் 07ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி அதிபர் அருட்தந்தை றொபின்சன் ஜோசப் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புனித சூசையப்பர் ஆலயத்தில் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து பாடசாலை பிரதான மண்டபத்தில் அரங்க நிகழ்வுகளும் நடைபெற்றன.
அரங்க நிகழ்வில் ஒளிவிழா போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பும் தமிழ், ஆங்கில கரோல் பாடல்கள், தமிழ், ஆங்கில் நாடகங்கள், நடனங்கள், வில்லுப்பாட்டு போன்ற கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் முல்லைத்தீவு பங்கின் உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை லூயிஸ் அன்ரனி றொக் பஸ்ரியன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் முன்பள்ளி அதிபர் அருட்சகோதரி ஹில்டா சிங்கராயர், பாடசாலையின் பழைய மாணவரும் முன்னாள் அதிபருமான திரு. இசிதோர் பெர்னாண்டோ, திருமதி. இசிதோர் பெர்னாண்டோ, புதுக்குடியிருப்பு பனை அபிவிருத்தி கூட்டறவு சங்க பொது முகாமையாளர் திரு. செபஸ்ரியாம்பிள்ளை ஆகியோர் சிறப்பு விருத்தினர்களாகவும் கலந்துகொண்டனர்.

