புதுக்குடியிருப்பு றோ.க வித்தியாலய வருடாந்த பரிசளிப்புவிழா ஐப்பசி மாதம் 30ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
வித்தியாலய அதிபர் அருட்தந்தை றொபின்சன் ஜோசப் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 2024, 2025ஆம் கல்வி ஆண்டுகளில் கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் சிறப்பு சித்திபெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.
அக்கராயன் பங்குத்தந்தையும் பாடசாலையின் பழைய மாணவருமான அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை ஜேம்ஸ் அல்போன்ஸ் சேகர் அவர்கள் பிரதம விருந்தினராகவும் கோட்ட கல்வி அதிகாரி திரு. பாஸ்கரன், புதுக்குடியிருப்பு பங்குத்தந்தை அருட்தந்தை அஜந்தன், கட்டார் நாட்டு பழைய மாணவர் சங்க உறுப்பினர் திரு. இம்மானுவேல் விமலதாஸ் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்களென பலரும் கலந்துகொண்டனர்.

