முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க வித்தியால ஆரம்ப பிரிவு மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட கண்காட்சி யூலை மாதம் 18ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வித்தியாலய அதிபர் அருட்தந்தை றொபின்சன் யோசப் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கண்காட்சியில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி அதிபர் திரு. நேவிட் ஜீவராசா அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கண்காட்சியை ஆரம்பித்துவைத்தார்.
சிறார்களின் கைவண்ணத்தால் உருவான ஆக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்ட இந்நிகழ்வில் வித்தியாலய அதிபர், பிரதி அதிபர், பகுதித்தலைவர் ஆகியோர் இணைந்து கண்காட்சி தொடர்பான கருத்துரைகளையும் வழங்கினர்.
அத்துடன் புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க வித்தியால மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வும் யூலை மாதம் 23ஆம் திகதி புதன்கிழமை அங்கு நடைபெற்றது.
இந்நிகழ்வில் 32 மாணவர்களுக்கு மாணவத்தலைவர்களுக்கான சின்னங்கள் சூட்டிவைக்கப்பட்டன.