புதுக்குடியிருப்பு பங்கு மறைக்கல்வி மாணவர்களுக்கான இறையழைத்தல் பாசறை பங்குனி மாதம் 01ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை அஜந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கார்மேல் கன்னியர் சபை அருட்சகோதரிகள் கலந்து குழுச்செயற்பாடுகள், விளையாட்டுக்கள், கருத்துரைகள், படக்காட்சி என்பவற்றின் ஊடாக மாணவர்களை நெறிப்படுத்தினர்.

இந்நிகழ்வில் 180 வரையான மாணவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

அத்துடன் புதுக்குடியிருப்பு பங்கு மறைக்கல்வி மாணவர்களுக்கான தவக்கால தியானம் மாசி மாதம் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை மந்துவில் திருமுக ஆண்டவர் ஆலயத்தில் நடைபெற்றது.

தியான உரைகள், குழு விளையாட்டுக்கள், சிலுவைப்பாதை தியானம், பொம்மலாட்டம், நற்கருணை வழிபாடு என்பன இடம்பெற்ற இத்தியானத்தில் 120ற்கும் அதிகமான மறைக்கல்வி மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

By admin