பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் மக்களின் பிரசித்தி பெற்ற மரியன்னையின் திருத்தலமாகிய வோல்சிங்கம் மாதா திருத்தல திருவிழா பிரித்தானிய தமிழ் கத்தோலிக்க ஆன்மீக இயக்குனர் அருட்தந்தை எல்மோ அருள்நேசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 11ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்ததுடன் யாழ். மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்தந்தை சகாயநாயகம் அவர்களும் இவ்விழாவில் இணைந்துகொண்டார்.

பிரித்தானியாவின் எல்லா பகுதிகளிலும் இருந்தும் ஆயிரக்கணக்கான கத்தோலிக்க, கிறிஸ்தவ, இந்து மத மக்கள் ஒன்றுகூடி இவ்விழாவில் கலந்து அன்னையின் ஆசீரை பெற்றுச்சென்றனர்.

By admin