அன்னை மரியின் பிரான்சிஸ்கன் சபை அருட்சகோதரிகளுக்கான நித்திய அர்ப்பண வார்த்தைப்பாட்டு நிகழ்வு மாசி மாதம் 11ஆம் திகதி கடந்த புதன்கிழமை கொழும்பு பொறல்ல புனித அந்தோனியார் மடத்தில் நடைபெற்றது.
மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் அருட்சகோதரிகள் மரிய செனோஜா செபஸ்ரியாம்பிள்ளை மற்றும் அன்ரனிற் சுஜானி ரூபன் ஆகியோர் தமது நித்திய அர்ப்பண வார்த்தைப்பாட்டை நிறைவேற்றினர்.
இத்திருப்பலியில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அருட்சகோதரிகளின் உறவினர்கள், இறைமக்களென பலரும் கலந்து செபித்தனர்.
