யாழ். பல்கலைக்கழக நாடகமும் அரங்கக்கலைகளும் துறையின் முப்பதாவது அணி மாணவர்களால் சுன்னாகம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட பிரயோக அரங்க ஆற்றைகை செயற்பாடு 20ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வெளிநாட்டு மோகம் மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் பண மோசடிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் புனித அந்தோனியார் ஆலய முன்றலில் மேடையேற்றப்பட்ட ஆற்றுகையில் பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள், பங்குமக்களென பலரும் கலந்துகொண்டனர்.